யாழ்.இந்திய துணைத்தூதராகத்தால் முஸ்லீம் குடும்பங்களுக்கு உதவி திட்டம்
புனித ரமழானை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 150 முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.