பெண் சிலைகளையும் விட்டுவைக்காத மனிதர்கள்: ஜேர்மனியில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம்
ஜேர்மனியில் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு ஆதரவாக, சில பெண் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பெண் சிலைகளையும் விட்டுவைக்காத மனிதர்கள்
இந்த சிலைகளில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், சிலையின் சில பகுதிகள் மட்டும், அதாவது, அந்த பெண் சிலையின் மார்பகங்கள் மட்டும் பளிச்சென காணப்படுகின்றன.
அதற்குக் காரணம், அந்த சிலைகளின் அந்தக் குறிப்பிட்ட இடங்கள் மட்டும் மனிதர்களால் அதிகம் தொடப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு ஆதரவாக, Terre des Femmes என்னும் பெண்கள் உரிமை அமைப்பு இந்த சிலைகளை காட்சிக்கு வைத்துள்ளது.
சிலைகளின் பின்னணியில், எப்படி இந்த சிலைகளைத் தொடுவது ஒரு அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளதோ, அதேபோல, பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் மனதிலும் அவை நீங்காத வடுவை ஏற்படுத்திவிடுகின்றன என்று எழுதப்பட்டுள்ளது.
Terre des Femmes அமைப்பைச் சேர்ந்த Sina Tonk என்னும் பெண் கூறும்போது, பாலியல் துன்புறுத்தல் என்னும் பிரச்சினைக்கு பெரும்பாலும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை, ஆகவே, பாதிக்கப்பட்டவர்களில் குரல்கள் செவிசாய்க்கப்படுவதையும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும் உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்கிறார்.