;
Athirady Tamil News

பெண்களை இழிவுப்படுத்துவதில் …வேலூரில் ஜெயலலிதாவை சுட்டிக்காட்டி ஆவேசமான பிரதமர் மோடி

0

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள மோடி, வேலூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.

மோடி பரப்புரை
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரகாலமே இருக்கும் நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.

ஒரே ஆண்டில் 7-வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று சென்னை பாண்டி பஜாரில் ரோட் ஷோ மேற்கொண்டார். இன்று சென்னையில் இருந்து வேலூர் சென்ற அவர் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரப்புரைக்கு வருகை தனது மோடி, தமிழர் பாரம்பரியமான வெட்டி உடுத்தி வந்தார். தேர்தல் பரப்புரையில் அவர் பேசியது வருமாறு.

  • தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். பொது மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முருகன் பெருமானை நான் வணங்குகிறேன்.
  • தமிழ் புத்தாண்டில் தமிழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். வேலூரில் புதிய வரலாறு ஏற்படப் போகிறது என்பது டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது.
  • 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். இந்தியா கூட்டணியினர் பெண்களை அவமதிக்கின்றனர்.

    இந்து மதத்தில் உள்ள பெண் சக்தியை அழிப்பேன் என்று ராகுல் காந்தி கூறினார். திமுகவுக்கும் அதே மனநிலை தான். சனாதனத்தை அழிப்பேன். ராமர் கோவில் விழாவை புறக்கணிப்பேன் என்றனர் திமுகவினர்.

  • பெண்களை இழிவுப்படுத்துவதில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்து வேலை செய்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எப்படியெல்லாம் இவர்கள் மோசமாக பேசினர் என்பது நமக்கு தெரியும். தற்போதைய திமுக தலைவர்கள் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர் .
You might also like

Leave A Reply

Your email address will not be published.