;
Athirady Tamil News

யாழில் ஆராக்கிய உணவகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு

0

யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான், இறங்குதுறை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (10.04.2024) இடம்பெற்றுள்ளது.

உணவக திறப்பு விழா
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாகவும் தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் வேலணை பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் பிரதேச செயலகமும் இணைந்து நடத்துகின்ற ஆரோக்கிய உணவகமே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துக்கொண்டுள்ளார்.

மேலும் புங்குடுதீவு குறிகாட்டுவான், இறங்குதுறை அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய உணவகத்தின் ஊடாக பாரம்பரிய மற்றம் இயற்கையான உணவுகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் மக்களிற்கு வழங்குவதற்காகவும், சுற்றுலா துறையை மேம்படுத்தம் நோக்குடனும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.