;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் காரணமாக 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.

மேலும், அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்திற்காக 107 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம்
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை 08ஆம் திகதி முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னர் தெரிவித்திருந்தார்.

மேலும், நாட்டில் உள்ள 28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கப்படும் என்றும் இது உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்திருந்தார்.

அஸ்வெசும திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது. நெருக்கடி காலத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் இருக்கவில்லை. மின்சாரம் இருக்கவில்லை.

இன்று போதியளவு எரிபொருள் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. இன்று முச்சக்கர வண்டிகளில் போஸ்டர் ஒட்டி அரசியல் செய்கிறார்கள்.

மக்களுக்கான நிவாரணத் தொகை
கடந்த இரண்டு வருடங்களில் உரிய நடவடிக்கையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. இந்த பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம்.

இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.

மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.