ஜேர்மனியில் கடுமையான நாடு கடத்தல் விதிகளை நடைமுறைப்படுத்த திட்டம்
ஜேர்மனியில் (Germany) குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அதிவிரைவாக நாடுகடத்த வேண்டும் என்று ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் (Nancy Faeser) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் குற்றவாளிகள் ஜேர்மனியை விட்டு மேலும் அதிவிரைவில் வெளியேறவேண்டும் என்றும், உருவாக்கியுள்ள கடுமையான நாடுகடத்தல் விதிகளை நடைமுறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
குற்றச்செயல்களின் புள்ளி விவரம்
அத்துடன் கடந்த ஆண்டில் கொடும் வன்முறைக் குற்றங்கள் 8.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை சகித்துக்கொள்ள முடியாது எனவும், விதிகளை ஒழுங்காக பின்பற்றாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புள்ளிவிவரங்கள் ஜேர்மனியில் கடந்த ஆண்டில் குற்றச்செயல்கள் 5.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் வெளிநாட்டுப் பின்னணி கொண்டவர்கள் என கருதப்படுவோரின் எண்ணிக்கை 13.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே, குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அதிவிரைவாக நாடு கடத்தவேண்டும் என நான்சி ஃப்ரேஸர் கூறியுள்ளார்.