;
Athirady Tamil News

இணையத்தில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய ஆவணங்கள்: விசாரணைகள் தொடர்பில் பைடன் விளக்கம்

0

அமெரிக்காவின் முக்கிய ஆவணங்களை இணையத்தில் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான வழக்கை கைவிடுவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.

இதன்படி அசாஞ்சே தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்(Anthony Albanese) “பெப்ரவரியில் அசாஞ்சே தமது நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று ஒரு பிரேரணையை அமெரிக்காவிடம் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்திற்கு இணங்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது,

தேசிய பாதுகாப்புத் தகவல்கள்
“​​​​நாங்கள் அதை பரிசீலித்து வருகிறோம் அசாஞ்சேவின் வழக்கறிஞர் முன்வைத்துள்ள கருத்துக்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்” என்றார் ஜோ பைடன் .

52 வயதான அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த அசாஞ்சே, தேசிய பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றமைக்கு வெளிப்படுத்தியமைக்கும், எதிரான குற்றச்சாட்டில் பிரித்தானியாவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் தொடர்பான நூறாயிரக்கணக்கான ஆவணங்களை அவர் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தஞ்சம் புகுந்திருந்த ஈக்வடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்படி அவரை அமெரிக்காவால் நாடு கடத்துவதற்கான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த பெப்ரவரி மாதம் இரண்டு நாள் நீதிமன்ற விசாரணையின் போது, ​​அசாஞ்சேவின் வழக்கறிஞர்கள் அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியிருந்தனர்.

இந்நிலையில் பிரித்தானிய அரசு ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரணதண்டனை விதிக்கப்படாது என்பதை அமெரிக்க உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது முன்வைத்துள்ளது.

இதற்கமைய அமெரிக்க தரப்பு வழங்கவுள்ள பதிலே ஜூலியன் அசாஞ்சே தொடர்பிலான அடுத்த கட்ட நகடவுகளை அவுஸ்திரேலிய, மற்றும் பிரித்தானிய அரசு மேற்கொள்ள வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.