;
Athirady Tamil News

5000 AK-47, ஏவுகணைகள்., உக்ரைனுக்கு 4 கப்பல்களின் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா

0

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பாரிய அளவிலான ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

ஏற்கனவே பல வகையான ஆயுதங்களை அனுப்பியுள்ள அமெரிக்கா, இப்போது நான்கு கப்பல்களின் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது.

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பாரிய ஆயுதங்களை அனுப்புகிறது. அந்த ஆயுதங்கள் அமெரிக்க கடற்படையால் கைப்பற்றப்பட்டன.

அமெரிக்க கடற்படை ஆயிரக்கணக்கான தாக்குதல் துப்பாக்கிகளையும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தோட்டாக்களையும் கைப்பற்றியது.

கடந்த ஆண்டு முதல், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை உக்ரேனிய இராணுவத்திற்கு சட்டப்பூர்வமாக அனுப்ப ஜோ பைடன் நிர்வாகம் தயாராகி வருகிறது.

உக்ரைனுக்கு உதவ ஈரானில் இருந்து கைப்பற்றப்பட்ட 5000 AK-47 ரக துப்பாக்கிகள், ரொக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வெடிமருந்துகளை அனுப்புவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் கடுமையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. அதிக நிதிக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை போர்ப் பொருட்களை அதன் சொந்த கையிருப்பில் இருந்து அனுப்ப முடியாது என்று அமெரிக்க வட்டாரங்கள் கூறுகின்றன.

உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு அரசாங்கம் 5,000க்கும் அதிகமான AK-47 இயந்திர துப்பாக்கிகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், APG-4 மற்றும் 500,000 வெடிமருந்துகள் ஆகியவற்றை ஏப்ரல் 4 அன்று வழங்கியதாக மத்திய கட்டளை சென்ட்காம் தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதங்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைனைப் பாதுகாக்க உதவும் என்று அமெரிக்க மத்தியக் கட்டளைத் துறை தெரிவித்துள்ளது.

மே 22, 2021 மற்றும் பிப்ரவரி 15, 2023-க்கு இடையில் நான்கு கப்பல்களில் இருந்து இந்த ஆயுதங்களை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.