;
Athirady Tamil News

ஒட்டுமொத்த மக்களும் ஒரு கட்டடத்திலே வசிக்கும் நகரம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா….

0

அமெரிக்காவில் (United States) உள்ள ஒரு மாகாணத்தில் முழு நகரமும் ஒரே கட்டடத்தில் வசிக்கின்றது. இங்குள்ளவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே குடியிருப்பில் வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

அமெரிக்காவின் வடகோடி மாநிலமான அலஸ்காவில் (Alaska) உள்ள பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும். இங்கு விட்டர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. 15 வருடங்களுக்கு முதல் இந்தப் பகுதிக்கு வரவேண்டும் என்றால் கடல் வழியாக மட்டுமே பயணம் செய்ய முடியும்.

இந்த நகரம் அதிக குளிரான பகுதி என்பதால் பொதுமக்களால் அடிக்கடி வெளியே சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒரே கட்டடத்தில் வசிக்கின்றனர்.

200 வீடுகள்
14 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளதுடன் இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்தும் இந்த கட்டிடத்தின் முதல் தளத்திலேய உள்ளது. மேலும் இப்பகுதியில் துறைமுகம் உள்ளதால் இங்குள்ள மக்களின் வேலைவாய்ப்புக்கும் உதவுகின்றது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு பனிப்போர் நடந்த போது இந்த பகுதியில் இராணுவ துறைமுகம் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ தளம் அமைக்கப்பட்டு இராணுவ வீரர்கள் குடும்பத்துடன் இங்கு நேரத்தை செலவிடத் தொடங்கினர்.

இது கடும் பனிப்பொழிவு நிலவும் பகுதி என்பதால் இந்த நகரம் அவ்வப்போது பனியில் மூழ்கிவிடும். இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, 1954 முதல் 1957 வரை இரும்பு மற்றும் சீமெந்தினால் இங்கு கட்டடம் கட்டப்பட்டது.

அலஸ்காவின் வரலாற்று சான்று
இந்த கட்டத்தில் சுமார் 700 இற்கும் அதிகமானோர் வசிக்கலாம். 1956இல் முதன்முதலாக இந்த கட்டடம் செயற்பாட்டுக்கு வந்த போது அதற்கு ஹாட்ஜ் என பெயரிடப்பட்டது. பிறகு அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து கட்டடத்தை வாங்கிய பொதுமக்கள் 1972இல் இதற்கு பெகிச் டவர் எனப் பெயரிட்டனர்.

பல்பொருள் அங்காடிகள், காவல் நிலையம், கோயில், மருத்துவமனை, தபால் அலுவலகம் என அனைத்துமே இந்த கட்டடத்தில் அமைந்துள்ளதுடன் கடும் குளிரைச் சமாளிக்க பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கட்டடத்தின் கீழ் சிறப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரில் இருந்து தங்களைக் காப்பாறிக்கொள்ள அனைவரும் ஒரே இடத்தில் வசிக்கும் இந்தக் கட்டடம் அலஸ்காவின் வரலாற்று சான்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.