தெரியாதுனு நினைக்காதீங்க; மன்னிப்பெல்லாம் ஏற்க முடியாது – பாபா ராம்தேவிடம் நீதிபதிகள் காட்டம்!
உத்தரகாண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பதஞ்சலி
பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,பாபா ராம்தேவுக்கும் ஏற்கெனவே பல முறை வார்னிங் கொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் காட்டம்
மேலும், பதஞ்சலியின் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ளது. எனவே, அம்மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இணை இயக்குநர் டாக்டர் மிதிலேஷ் குமார் ஆஜராகியிருந்தார். அவரிடம், “பதஞ்சலி நிறுவனத்திற்கு நீங்கள் இணங்கி சென்றிருக்கிறீர்கள் என ஏன் நினைக்க கூடாது?
நாங்கள் ஏன் அனைத்து அதிகாரிகளையும் இப்போதே சஸ்பெண்ட் செய்யக் கூடாது? மருந்து மற்றும் உரிமம் வழங்கும் அதிகாரிகளின் வேலை என்ன என்பது தெரியுமா? உங்கள் அதிகாரிகள் எதையும் செய்யவில்லை. இந்த விவகாரத்தை நாங்கள் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள போவதில்லை” என காட்டம் தெரிவித்துள்ளனர்.