ஹோட்டல் ஐஸ் கட்டியில் செத்துப்போன எலி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் எலி சடலம் கிடந்து சம்பவ ம் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்ட பனிக்கட்டி ஒன்றில் உறைந்த நிலையில் எலி சடலம் இருந்துள்ளது.
சம்பவம் குறித்து வாட்ஸ் ஆப் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உள்ளிட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் , இந்த ஐஸ் கட்டிகள் விநியோகம் செய்யப்பட்ட இடங்கள், ஐஸ்கட்டி தொழிற்சாலைகள் உட்பட தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.