ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு: நிதி அளிப்பவரை கொன்றது இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பிற்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளித்துவந்த நாசர் யாக்கோப் ஜாபர் நாசர் என்பவர் இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ரபாவில் நடைபெறும் ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்தவர் நாசர் எனவும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பல லட்சம் டொலர்களை இவர் அளித்துள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸின் பயிற்சி மையங்கள் தகர்ப்பு
மேலும் கடந்த சில நாள்களாக வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல், துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹமாஸின் பயிற்சி மையங்கள் தகர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் படுகொலை
ஒரு நாளுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் மூன்று மகன்கள் வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.