கனடாவில் புதிய வீடு வாங்க காத்திருந்தோருக்கு பேரிடி!
கனடாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கனேடியன் இம்பிரியல் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி,வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி கிடையாது என கருதுவதாக 76 வீதமான கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சந்தையில் விலை அதிகரிப்பு
இந்நிலையில்,70 வீதமானவர்கள் வீடுகளின் விலைகள் உயர்வடைந்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான பிரதான தடையாக சந்தையில் விலை அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
வீடு கொள்வனவு
குடும்பத்தினரிடமிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றால் மட்டுமே தம்மால் வீடுகளுக்கு உரிமையாளராக முடியும் என கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 55 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயமாகவே இதுவரையில் வீடு கொள்வனவு செய்யாதவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.