கோடீஸ்வரருக்கு மரண தண்டனை விதித்த வியட்நாம்., 8 லட்சம் கோடி மோசடி அம்பலம்
வியட்நாம் கோடீஸ்வரருக்கு அந்நாட்டின் மிகப்பாரிய மோசடி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் (Vietnam) Real Estate அதிபரான பில்லியனர் ட்ரூங் மிலனுக்கு (Truong My Lan) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் டொலர் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ட்ரூங் அந்நாட்டின் பிரபல டெவலப்பரான Van Thinh Phat Group நிறுவனத்தின் தலைவர் ஆவார். கடந்த தசாப்தத்தில் இருந்து சைகோன் வணிக வங்கியில் (SCB) அதிக அளவு பணத்தை எடுத்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவர் வங்கிகளில் இருந்து சுமார் 12.5 பில்லியன் டொலர்களை (இலங்கை பணமதிப்பில் ரூபா. 3,73,130 கோடி) எடுத்ததாக வழக்கு உள்ளது. ஆனால் இந்த மோசடியின் மொத்த தொகை சுமார் 27 பில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூபா. 8,05,961 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மொத்தத் தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதமாகும். இந்த மோசடி வழக்கில் பல அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
மிலன் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு பணக்கார தொழிலதிபரை மணந்தார். ஆனால் இந்த வழக்கில் அவரும் விசாரணையை எதிர்கொள்கிறார்.
போலி கடன் விண்ணப்பங்கள் மூலம் SCB வங்கியில் (Saigon Commercial Bank) இருந்து பெரும் தொகையை திரும்பப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.