யாழில் புத்தாண்டு கண்காட்சி ; உள்ளூர் உற்பத்தியாளர்களின் விசேட உற்பத்திகள்
யாழ். மாவட்ட உள்ளூர் முயற்சியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களின் கண்காட்சியானது நல்லூர் சங்கிலியன் சிலைக்கருகில் உள்ள கிட்டு பூங்காவில் இடம்பெற்றவுள்ளது.
நேற்றையதினம்(11) ஆரம்பமாகிய நிலையில் நாளை(13) வரை தொடர்ந்து காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை யாழ்ப்பாணம் இடம்பெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பங்கேற்றுள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் தங்களது உணவு உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், காலணிகள், தைத்த ஆடைகள், பெண்களுக்கான கைப்பைகள், பூங்கன்றுகள் என பல்வேறு உற்பத்திகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இக்கண்காட்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பொருள்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
தொழில்துறை திணைக்களம், கைத்தொழில் அபிவிருத்தி சபை, சிறுதொழில் அபிவிருத்தி முயற்சி பிரிவு, விதாதா வள நிலையம் போன்ற திணைக்களங்களோடு சேர்ந்து யாழ் மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம், யாழ் மாநகர சபையின் பூரண ஒத்துழைப்போடு இக்கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை , வாராந்தம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிரந்தரமாக சங்கிலியன் சிலைக்கருகே இக்கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.