இலங்கைக்கான மற்றுமொரு சேவையை ஆரம்பித்தது IndiGo
இன்று முதல் மும்பை மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை IndiGo விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறும் என IndiGo விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த புதிய இணைப்புடன் IndiGo இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் இருந்து கொழும்புக்கு வாராந்தம் 30 விமானப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே விமான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து IndiGo வுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை ஒன்றை அண்மையில் நடத்தியுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் IndiGo யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவையைத் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.