கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!
எதிர்வரும் காலங்களில் கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என கொலம்பியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகியனவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் நட்டஈடு பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொலைபேசிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுகின்றது.
நட்டஈட்டுத் தொகை
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து 14.4 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்பிள் நிறுவனம் மறுப்பு
இதன்போது,2023ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கனேடிய பிரஜைகளாக இருப்பவர்கள் இந்த நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை அப்பிள் நிறுவனம் மறுத்து வருகின்றது.
இதேவிதமான மற்றுமொரு வழக்கு குபெக்கிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.