;
Athirady Tamil News

சீருடை மாற்றம்; காவி உடையில் பூசாரிகள் வேடத்தில் போலீஸார் – சர்ச்சைக்குள்ளான அரசு!

0

காவலர்கள், பூசாரிகள் போல காவி உடை அணிந்திருந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில்
உத்தரப் பிரதேசம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், இங்கு கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியை கவனித்து வரும் காவலர்கள், பக்தர்கள் – பூசாரிகளை போல காவி உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகி கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இது குறித்து வாரணாசி காவல் ஆணையர் மோகித் அகர்வால் கூறுகையில், சில நேரங்களில் காவலர்கள் தங்களை வலுக்கட்டாயமாக தள்ளுவதாக பக்தர்கள் புகார் தெரிவிப்பது உண்டு. அதுவே பூசாரிகள் அதனை சொன்னால் பணிவுடன் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

அரசுக்கு கண்டனம்
அதற்காகவே இந்த ஏற்பாடு. இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர் என்றார். தற்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா?

பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.