தேர்தல் ஆணையம் மேல் பகிரங்க குற்றசாட்டு; நீதிமன்றத்தில் திமுக வழக்கு- என்ன விஷயம்!
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குபதிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையம்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் காலம் சற்று சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையொட்டி அரசியல் காட்சிகள் மற்றும் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தொலைக்காட்சி, பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவை விளம்பரங்கள் வெளியிட்டு தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.
திமுக வழக்கு
அனுமதி கேட்டு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது இரண்டு நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க ஆறு நாட்கள் வரை தேர்தல் ஆணையம் எடுத்துக் கொள்கிறது.
சில விளம்பரங்களை சாதாரண காரணங்களை கூறி நிராகரிக்கிறார்கள். இதனால் திமுகவின் பிரச்சாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே, திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்குவது தொடர்பான விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகாக தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா அமர்வில் வரும் 15ஆம் தேதி வரவுள்ளது.