பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடு: அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவசர இலக்கம்
புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பேருந்து உரிமையாளர்கள்
புத்தாண்டு காலத்தில் பேருந்துகளின் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.