யாழ்ப்பாணத்தில் பாடசாலையருகே வீதி விபத்து
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள பாடசாலையருகே விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (13.4.2024) கோப்பாய் நாவலர் பாடசாலையருகே இடம்பெற்றுள்ளது.
எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இவ்விபத்து ஹையேஸ் வானமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதிலை உடைத்து கொண்டு பாய்ந்ததில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.