நாட்டின் எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து
இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விற்பனை தொடர்பில் அவர் தனது டுவிட்டர் செய்தியொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருளின் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
எரிபொருள் விற்பனை இலங்கையில் சிபெட்கோ, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் கடந்த பருவத்தில் விற்பனை செய்த எரிபொருள் அளவு தொடர்பான தரவுகளை சுட்டிக்காட்டினார்.
கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.