தொடருந்து சேவைகள் இரத்து – பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
சில அலுவலக தொடருந்துகள் இன்று (14.4.2024) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை இலங்கை தொடருந்து திணைக்களம் (Srilankan railways) தெரிவித்துள்ளது.
விசேட நேர அட்டவணை
எனினும், நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விசேட நேர அட்டவணையின் கீழ் 6 தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் (Srilankan railways) தெரிவித்துள்ளது.