ஈரானின் தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்து வெளியான தகவல்!
ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளது எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பதவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
10 வயதுச் சிறுவன் காயம்
இந்த நேரத்தில் விமானப்படை விமானங்கள் இஸ்ரேல் நாட்டின் எல்லைக்கு வெளியே கப்பல் ஏவுகணைகளை இடைமறித்து வருகின்றன எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் UAVகளின் முதல் அலை இஸ்ரேலில் இருந்து வெகு தொலைவில் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதுடன் ஏவுகணைகளின் இரண்டாவது அலையால் இதுவரை அறியப்பட்டவற்றிலிருந்து முக்கியமான தளங்களில் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜோர்தானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 வயது சிறுவன் ட்ரோன் தாக்குதலால் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.