நுகர்வோர் சட்டத்தை மீறிய 700ற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பொருட்களில் விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக அதிகாரசபையின் விசேட விசாரணை பணிப்பாளர் சஞ்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7,627 வர்த்தக நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.