இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது! பைடன் பகிரங்கம்
ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக கூறியுள்ளார்.
தூதரக தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பாரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலுக்கு சேதங்கள் குறைவாக இருப்பினும் தெஹ்ரான் தன்னை ஒரு பிராந்திய சக்தியாக நிலைநிறுத்துவத்திக்கொள்ள முனைவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையிலானதாக இருந்தாலும், இது மத்திய கிழக்கு நாடுகளை போர் விளிம்புக்கு அழைத்து வரும் அறைகூவலாகவே பார்க்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு பதற்றமான சூழலில் ஈரானின் இந்தத் தாக்குதலிற்கு எதிர்வரும் 24 மணித்திலாவலங்களுக்குள் இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ள நிலையில், அவ்வாறு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக கூறியுள்ளார்.