இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்: டொனால்ட் டிரம்ப் கண்டனம்
“நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொண்டிருக்காது” என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல் தொடர்பில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வரும் பின்னணியிலேயே, அவர் இதனை தனது சமூக வளையத்தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், ஈரானின் குறித்த தாக்குதல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி நடந்திருக்காது
இந்த வரிசையில், தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் தனது எக்ஸ் தளத்தில் இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இப்படி நடக்க கண்டிப்பாக அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என தெரிவித்துள்ளார்.