இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள உலக தலைவர்கள்
ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி கடந்த 14 ஆம் திகதி ஈரான் ஆதரவு போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அதன் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான ஜோசப் பொரெல் ஆகியோர் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலைக் கண்டிப்பதாகவும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும், சீனாவும் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஈரானிய தாக்குதல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் ஈரானிய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு மற்றும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்தும் புனித பாப்பரசர் தனது கவலையை வெளியிட்டுள்ளதோடு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என புனித திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.