சிட்னி கொடூரம்… வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் பகிர்ந்த உருக்கமான பதிவு
அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் பயங்கர தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர்.
உருக்கமான அறிக்கை
சிட்னி நகரின் போண்டி சந்திப்பில் அமைந்துள்ள பிரபலமான வணிக வளாகம் ஒன்றிலேயே தொடர்புடைய பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சமூக ஊடகத்தில் தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி.
We are shocked and saddened by the terrible events in Sydney earlier today. Our thoughts are with all those affected, including the loved ones of those lost and the heroic emergency responders who risked their own lives to save others. W & C
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) April 13, 2024
குறித்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 9 மாத குழந்தை உட்பட பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். பொலிசார் நடத்திய அதிரடி நடவடிக்கையால் தாக்குதல்தாரியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி இணைந்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். புற்றுநோய் தொடர்பில் கேட் மிடில்டன் வெளியிட்ட காணொளிக்கு பின்னர், பொதுவெளியில் கேட் மிடில்டன் வெளியிடும் முதல் அறிக்கை இதுவென்றே கூறப்படுகிறது.
பச்சிளம் குழந்தை உட்பட பலர்
சிட்னி நகரில் நடந்த தாக்குதல் சம்பவம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும், அவசர உதவிக்குழுவினரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை இந்த தருணத்தில் நினைவுகூறுவதாக குறிப்பிட்டுள்ள வில்லியம் – கேட் தம்பதி, நடந்த சம்பவத்தால் துயரமடைந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளனர்.
சிட்னி தாக்குதலில் 6 பேர் பலியாகினர் என்றும் பச்சிளம் குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளனர் என்றும் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்துள்ள அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி அல்லது நோக்கம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.