விபத்தில் சிக்கிய வடக்கு ஆளுநரின் வாகன தொடரணி
வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் யாழ் மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் பாதசாரிகள் கடவையில் வேகத்தை கட்டுப்படுத்தியது. எனினும் வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநர் வாகனத் தொடரணி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.