யாழில். போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 07 இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட வன்முறை கும்பலில் 07 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்த்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.