;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் அரங்கேறும் தொடர் பயங்கரங்கள்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல்

0

அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் நேற்று (15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.

தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார்.

அதன்படி, பலர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம்
அதேவேளை, குறித்த தாக்குதலினால் யாருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவசர சேவைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த தாக்குதல் சம்பவமானது, தேவாலயத்தின் சமூக ஊடகங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தி குத்தியதில் 6 பேர் வரை உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.