ஈரான் மீது பதிலடி தாக்குதலுகு்கு தயாராகும் இஸ்ரேல் : மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதால் ஈரான் மீதான தாக்குதலை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அணு உலை, ஆயுதக்கிடங்குகள் மீது
ஆனாலும், ஈரான் அணு உலை, ஆயுதக்கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், சிரியா, லெபனானில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம்
ஆனால், தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் விரைவில் தாக்குதல் நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரை
இதேவேளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சர்களிடம் இன்று முன்னதாக ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது, ஈரானின் வார இறுதி தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும், ஆனால் புத்திசாலித்தனமாக செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாமல் பதற்றத்துடன் காத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அது இஸ்ரேலை ஈரான் செய்ய வைத்தது போல், என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி,இஸ்ரேல் ஈரானுக்கு பதிலளிக்கும் என்றும் அது எப்போது, எங்கு என்பது மட்டுமே கேள்வி என்றும் கூறுகிறார்.