சர்வதேச நாணய நிதியத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்யப்படும்: சஜித் உறுதி
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இணக்கப்பாடு
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நலன் வழங்கக்கூடிய, மனிதாபிமான நிபந்தனைகள் அடங்கிய புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள வங்குரோத்து நிலை மீட்கப்பட்டு அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் என சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.