ஈரானுக்கு பொருளாதாரத் தடை..! 32 நாடுகளுக்கு பறந்த கடிதம்
ஈரானுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என 32 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பியதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கடிதங்களை அனுப்பியதாகவும் ஈரானிய ஏவுகணை திட்டத்திற்கு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உலகின் முன்னணி நபர்களுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் போர்
இதேவேளை, ஈரானின் இராணுவப்படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஈரானின் இந்த தாக்குதல் தீவிரமாவதற்கு முன்னர் நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இதன் பின்னணியில் ஈரான்-இஸ்ரேல் போர் அச்சுறுத்தல் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் ஆகியோர் இதேபோன்ற முறையீடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.