இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்… உண்மையாகும் நோஸ்ட்ரடாமசின் கட்டியங்கள்!
இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு, பதிலடியாக வான்வெளியில் ஈரான் வானவேடிக்கை கொண்டாடிய நிகழ்வு இஸ்ரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய பதிவாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய வரலாற்று தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா, அது எத்தகையதாக அமையும், இஸ்ரேலின் தாக்குதல் இலக்கு எது, அது ஈரானின் அணுஆயுத சோதனை மையங்களா அல்லது போனால் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களின் தளங்களா என்ற கேள்வி உலக அரங்கில் இன்று பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் ஒரு போர் உலகமக்களால் தாங்கிக்கொள்ள முடியாதது இது அழிவிற்கான அறைகூவலாக அமையும் மத்திய கிழக்கில் ஏற்கனவே போரும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்க இஸ்ரேலும் ஈரானும் மோதிக்கொள்ள தலைப்படுவது ஆரோக்கியமான விடயமன்று என ஐ.நா வின் பொதுச்செயலாளர் மன்றாடி நிற்பதும் அனைவரும் அறிந்த விடயமே,
நிலைமை இவ்வாறிருக்கையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய உலகின் நிலவரங்களை கணித்துச் சொன்ன பிரான்ஸ் இன் தீர்க்கதரிசி நோஸ்ட்ரடாமஸ் இன் கட்டியங்கள் இன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே, அவர் 2022 ஆம் ஆண்டில் உலகம் மிகப்பெரிய கடற்படை போரை சந்திக்கவுள்ளதாக கணித்திருந்தார், அது இன்று இடம்பெறும் இஸ்ரேல் – இரானிடையேயான போர்ச்சூழலையே சான்று பகர்ந்து நிற்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.