ரஷ்யாவின் இரு நகரங்களில் குடியிருப்பாளர்கள் வெளியேற உத்தரவு
ரஷ்யாவில் உள்ள இரண்டு நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் குர்கான், டியூமென் நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அபாயகரமான வெள்ளம்
Tobol, Ishim நதிகள் குர்கான் மற்றும் டியூமென் நகரங்களுக்கு அருகே பாய்கின்றன. இந்த நதிகளில் அபாயகரமான அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
செவ்வாய்கிழமை அன்று நதிகள் 8 மீற்றர் நெருங்கிவிட்டன அல்லது அதைத் தாண்டியதால் வாரத்தின் நடுப்பகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கிரெம்ளின் தெரிவித்தது.
இதன் காரணமாக 2 நகரங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Vkontakte வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பிராந்தியத்தின் அன்பான குடியிருப்பாளர்களே, நீங்கள் வெள்ளப் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் உடனடியாக வெளியேறவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி வெளியேற்றம்
குர்கன் பிராந்திய ஆளுநர் Vadim Shumkov வெளியிட்ட எச்சரிக்கையில், ‘3,00,000க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிராந்திய தலைநகரை நோக்கி பாரிய அளவில் நதி நீர் வேகமாக பாய்கிறது. இது ஒரு வெள்ளம் மட்டுமல்ல, இது ஒரு உண்மையான அச்சுறுத்தல்.
உங்கள் குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்ற உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரை தற்காலிக தங்குமிடங்களுக்கு அல்லது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.
தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை சேகரிக்கவும். உங்கள் உடமைகளை காலி செய்யவும் அல்லது மேல் தளங்களுக்கு கொண்டு வரவும், உடனடியாக உங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை விட்டு வெளியேறவும்’ எனக் கூறியிருந்தார்.