சார்லசை பிரிய காரணம் கமீலா அல்ல, இவர்கள்தான்: மரணத்துக்கு முன் டயானா தெரிவித்த தகவல்
தன் கணவர் சார்லசுடனான திருமணம் முறிய காரணம் கமீலா அல்ல, தன் கணவரைச் சுற்றியிருப்பவர்கள்தான் என இளவரசி டயானா தனது மரணத்துக்கு முன் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
திருமணம் முறிய காரணம் கமீலா அல்ல
இன்று கமீலா இருக்கும் இடத்தில் இருந்திருக்கவேண்டியவர் இளவரசி டயானா. இன்னமும் பிரித்தானியாவில் பலருக்கும் அந்த எண்ணம் உண்டு என்பதை மறுக்கமுடியாது. ஆனால், வெறும் 36 வயதில் அகாலமரணமடைந்துவிட்டார் அவர்.
வாழ்ந்த கொஞ்சம் காலமும் கமீலா தன் வாழ்வை நாசமாக்கிவிட்டதாக குற்றம் சாட்டிக்கொண்டு, முன்னாள் கணவர் சார்லசையும் ராஜ குடும்பத்தையும் வெறுப்பேற்றும் விதத்தில் உடையணிந்துகொண்டு, புதிதாக காதலர்களைத் தேடிக்கொண்டு சர்ச்சையிலேயே கடந்து சென்றது அவர் வாழ்ந்த காலம்.
அப்படி கமீலாவை கரித்துக்கொட்டிக்கொண்டிருந்த டயானா, தன் திருமணம் முறிய காரணம் கமீலா அல்ல என தன்னிடம் கூறியதாகத் தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Ingrid Seward என்பவர்.
இவர்கள்தான் காரணம்
டயானாவின் மரணத்துக்குமுன், டயானாவை சந்திக்க தனக்கு வாய்ப்புக் கிடைத்ததாக தெரிவிக்கும் Ingrid Seward, சார்லசுடனான தன் திருமணம் முறிந்ததற்கான காரணம் குறித்து டயானா தன்னிடம் பேசிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார்.
அப்போது, தான் கமீலாவைக் குறித்த பேச்சை எடுத்ததும், ஓ, என் திருமண வாழ்வைக் கெடுத்தது கமீலா அல்ல என்றாராம் டயானா. என்ன, கமீலா இல்லையா? அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக கமீலாவைக் குறித்துதானே இவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார் என Ingrid Seward மனதுக்குள் எண்ணிக்கொண்டிருக்க, என் கணவரைச் சுற்றியிருப்பவர்கள்தான் என் திருமணம் முறிந்ததற்குக் காரணம் என்றாராம் டயானா.
ஒரு ராஜ குடும்ப திருமணத்தை நீட்டிக்கச் செய்வது அதைச் சுற்றியிருக்கும் சூழல்தான், நாம் மிகவும் வலிமையாக இருந்தாகவேண்டும், உண்மையில், நான் இருந்த நிலையைவிட இன்னும் முதிர்ச்சியுடன் இருந்திருக்கவேண்டும் என்று கூறினாராம் டயானா.
ஆனால், தன் திருமணம் முறிய காரணமாக இருந்த, சார்லசைச் சுற்றியிருந்த அந்த நபர்கள் யார் என்பதை குறிப்பிடவில்லை டயானா!