வெங்காய இறக்குமதிக்கு அனுமதி..! எடுக்கப்படவுள்ள புதிய தீர்மானம்
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதி செய்வதா? அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த தீர்மானமானது இன்று(17) எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ(Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெங்காய ஏற்றுமதி
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், 10,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருந்தது.
கடந்த காலங்களில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததன் மூலம் நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலையும் சடுதியதாக அதிகரித்தது.
இதற்கிடையில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பெரிய வெங்காயத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 10 முதல் 15 நாட்கள் எடுக்குமென அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.