;
Athirady Tamil News

நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்: நெதன்யாகுவிடம் ரிஷி சுனக் கோரிக்கை

0

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி ஈரான் தாக்குதலில் தொடர்ந்து நிதானத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் இரண்டு தளபதிகள் உயிரிழந்ததால் அதற்கு பதிலடி கொடுப்போமென ஈரான் சூளுரைத்தது.

இதனடிப்படையில் சூளுரைத்தது போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா உதவி
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியதுடன் ஈரான் நேரடியாகவும் தாக்குதல் நடத்தியது.

ஈரான் தாக்குதலை எதிர்பார்த்த இஸ்ரேல் அமெரிக்கா உதவியுடன் அனைத்து ஏவுகணைகளையும் வான் எல்லையிலேயே எதிர்த்து வெற்றிகரமாக அழித்து தாக்கியது.

இதனால் இஸ்ரேல் நாட்டில் பெரும் சேதம் ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டதுடன் தாங்களும் தயாரென பென்ஞமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் தாக்குதல்
அதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் காரணமாக உலகப்போர் மூளும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி ஈரான் தாக்குதலை தொடர்ந்து நிதானத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தனிமைப்படுத்துதல்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் தவறான கணக்கு போட்டுள்ளதுடன் உலகளாவிய அளவில் தனிமைப்படுத்துதலை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் நலன் இல்லை மற்றும் மத்திய கிழக்கில் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரமாக்கும் எனவும் இதனால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இங்கிலாந்தின் விரைவான மற்றும் வலுவான ஆதரவு நன்றி என நெதன்யாகு ரிஷி சுனக்கிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.