இஸ்ரேல், ஹிஸ்புல்லா ஏட்டிக்கு போட்டியாக தாக்குதல்
இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது விரிவடைந்து ஈரான் மற்றும் லெபனானில் ஆட்சி புரியும் ஹிஸ்புல்லா அமைப்பு வரை சென்றுள்ளது.
இதனால் போர் மேகங்கள் நாளாந்தம் எந்த திசையிலிருந்து வருமென தெரியாது பரிதவித்து நிற்கின்றனர் அங்கு வாழும் மக்கள்.
அந்த வகையில் நேற்றைய தினம் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் படைத்துறையும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை
இதன்படி வடகிழக்கு லெபனானின் பால்பெக் மாவட்டத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Iaat நகருக்கு அருகில் இந்த தா்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
من الضربة الإسرائيليّة على سهل إيعات في بعلبك. #إيعات #بعلبك #البقاع #إسرائيل #ليبانوس pic.twitter.com/NnLxujUxmg
— Lebanos (@lebanosnews) April 17, 2024
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் இலக்கு வைக்கப்பட்ட தளத்தில் இருந்து புகை எழுவதைக் காட்டுகிறது.
Baalbek, ஹிஸ்புல்லாவின் கோட்டையாக கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்ட பகுதி, இஸ்ரேலிய எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பதிலடி தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
இந்த தா்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லாவால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 14 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Additional footage shows the Hezbollah explosive-laden drone striking the community center in Arab al-Aramshe, wounding seven people. pic.twitter.com/DEE13pxE26
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) April 17, 2024