பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வீடியோக்கள் முடக்கம் – எக்ஸ் கொடுத்த அதிரடி விளக்கம்
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சமூகவலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக பதிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் சமூகவலைதள கணக்குகள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பிகார் துணை முதலமைச்சர் மற்றும் பாஜக தலைவர் சம்ரத் சவுதாரி ஆகியோரின் சமூகவலைதள கணக்குகளில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதியப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மாற்றுக் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பது போன்ற வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்திருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று சர்ச்சைக்குரிய பதிவு மற்றும் வீடியோகளை எக்ஸ் தளம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
அதேநேரம், இதில், தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் அரசியல் பேச்சுகள் தொடர்பான பதிவுகளுக்கும் கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது