;
Athirady Tamil News

மலையக மக்கள் சஜித்தின் பக்கமே: டிலான் உறுதி

0

மலையகப் பெருந்தோட்ட மக்கள் சஜித்(Sajith Premadasa) பக்கமே நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா(Dylan Pereira) தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் மலையகப் பெருந்தோட்ட மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிலான் பெரேரா, அரசியல் நெருக்கடியின்போது டலஸ் அழகப்பெரும( Dullas Alahapperuma) பக்கம் நின்றார்.

தற்போது அவர், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.