கலாசாலையில் தமிழகப் பேராசிரியரின் அதிதி உரை
தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் புலத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு . சின்னப்பன் வழங்கும் அதிதி உரை எதிர்வரும் 22.04.2024 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ‘ஆசிரியர் கல்வியின் சமகாலச் செல்நெறி’ என்ற பொருளில் உரை இடம்பெறும்.
நிகழ்வில் அதிதி அறிமுக உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறை விரிவுரையாளர் இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா ஆற்றுவார்.
தமிழக பேராசிரியரின் பெறுமதி மிக்க இவ்வுரை நிகழ்வில் விரும்பிய எவரும் கலந்து பயன் கொள்ளலாம் என கலாசாலை அதிபர் அறிவித்துள்ளார்.