மடிக் கணினிகள் அன்பளிப்பு
தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானத்தின் மகளிா் இல்லப் பிள்ளைகளின் கணினி அறிவினை விருத்தி செய்யும் நோக்கில்,
லன்டனில் வசிக்கும் திரு K.சிவநேசன் அவா்கள் மிகக் குறுகிய காலம் பயன்படுத்திய 22 மடிக் கணினிகளை நேற்றைய தினம் அன்பளிப்பாக வழங்கினாா்.
நேற்று(17.4) மாலை தெல்லிப்பழை துா்க்கா தேவி தேவஸ்தானத்திற்கு வருகை தந்த திரு K.சிவநேசன் அவா்கள் தேவஸ்தானத்தின் தலைவா் செஞ்சொற்செல்வாிடம் மடிக் கணினிகளை கையளித்தாா்.
தேவஸ்தானத்தின் மகளிா் இல்லப் பிள்ளைகளின் கணினி அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் கணினி ஆய்வுகூம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு இல்லப் பிள்ளைகளின் கணினி அறிவிற்காக பல வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட இந்த 22 மடிக் கணினிகளும் இல்லப் பிள்ளைகளுக்கு மேலும் கணினி அறிவினை விருத்தி செய்ய உதவும்.