பிரித்தானியாவை விட்டு வெளியேறிய விடயம்: எதிர்காலம் குறித்து பயப்படும் மேகன்
பிரித்தானிய மன்னரான சார்லசின் மகன் ஹரி, மேகன் என்னும் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, பிரித்தானிய ராஜ குடும்பத்தைவிட்டு மட்டுமின்றி, பிரித்தானியாவை விட்டும் வெளியேறினார்.
சமீபத்திய அதிர்ச்சி தகவல்
இதற்கிடையில், சில முக்கிய ஆவணங்களில், தான் வாழும் நாடு என்னும் இடத்தில், முன்பு பிரித்தானியா என இருந்ததை, தற்போது அமெரிக்கா என மாற்றியுள்ளார் ஹரி என்னும் விடயம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆக, ஹரி குடும்பத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
எதிர்காலம் குறித்து பயப்படும் மேகன்
இந்நிலையில், தனக்குத்தான் சிறு வயதில் சரியான குடும்பம் அமையவில்லை, இன்றும் தன் தந்தையும் சகோதரியும் தனக்கு மனவேதனையைத்தான் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்துள்ள மேகன், தன் பிள்ளைகளான ஆர்ச்சி, லிலிபெட்டின் எதிர்காலமும் அப்படி ஆகிவிடுமோ என பயப்படுவதாக Tom Quinn என்னும் ராஜ குடும்ப நிபுணர் தெரிவிக்கிறார்.
நாளை பிள்ளைகள் வளர்ந்துவரும்போது, தங்கள் பெரியப்பா பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸுடன் அவர்களுக்கு நெருக்கமான உறவு இருக்காதே என அவர் கவலைப்படுகிறார்.
ஆகவே, பிள்ளைகள் வளர்ந்துவரும்போது, தங்கள் சகோதர உறவுமுறையினரான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸுடனும், தங்கள் தந்தைவழி தாத்தா பாட்டியான சார்லஸ், கமீலாவுடனும் தங்களுக்கு சரியான உறவு அமையாததற்கு, தன் பிள்ளைகள் தன்னைக் குற்றம் கூறக்கூடும் என அவர் பயப்படுகிறார்.
மேலும், தங்கள் தந்தையும் தாயும் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்களாக இருந்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பிள்ளைகள் தன் மீது கோபப்படக்கூடும் என்றும் மேகன் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார் Tom Quinn.
ஆக, ஹரி குடும்பம் பிரித்தானியா திரும்ப, மேகன்தான் தடையாக இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தற்போது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மேகன் கவலைப்படத் துவங்கியுள்ளதால், நிலைமை மாறக்கூடும் என்ற ஒரு கருத்து உருவாகியுள்ளது.