ஒன்று இரண்டல்ல., ஐந்து கோடி! பிரபலமான 2 கோவில்களுக்கு ஆனந்த் அம்பானி நன்கொடை
இந்தியாவின 2 பிரபலமான கோவில்களுக்கு வருங்கால மனைவியுடன் ஜோடியாக சென்ற ஆனந்த் அம்பானி, ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ஆசியாவின் மிகப் பாரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான கோவில்களுக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
ஒடிசாவில் உள்ள ஜெகநாத கோவில் மற்றும் அசாமில் உள்ள மா காமாக்யா கோவிலுக்கு தலா 2,51,00,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
சைத்ரா நவராத்திரி விழாவையொட்டி நேற்று காமாக்யா கோவிலுக்கு ஆனந்த் அம்பானி சென்றார்.
ரிலையன்ஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனரான ஆனந்த் அம்பானி, காமாக்யா கோவிலுக்கு சென்று, கோவில் வளாகத்தில் உள்ள புறாக்களை விடுவித்தார். நீலாச்சல் மலையில் உள்ள மா பகலமுகி கோவிலுக்கும் சென்றார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி செல்வதைக் காணலாம்.
இந்த ஆண்டு, அம்பானி குடும்பம் சமீபத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் 14 புதிய கோவில்களை கட்டி முடித்தது.
இந்த ஆண்டு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்றது. இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினரால் கோயில்கள் கட்டப்பட்டன.
மார்ச் முதலாம் திகதி முதல் 3-ஆம் திகதி வரை நடந்த மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் ஹாலிவுட் நடிகர்கள், கோடீஸ்வரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.