நாடாளுமன்ற வளாகத்தில் இடிந்து விழுந்த கூரை! பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
நாடாளுமன்ற( Parliament of Sri Lanka) வளாகத்தின் நுழைவாயிலில் உள்ள ஜெயந்திபுர பிரதான சோதனைச் சாவடியில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்து
காயமடைந்த அதிகாரி நாடாளுமன்ற மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாரி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது .
மேலும் நேற்று முன்தினம் (17) நாடாளுமன்ற ஊழியர்கள் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மீண்டும் கடமைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.