;
Athirady Tamil News

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி

0

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது? கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான் பொறுப்பு கூறுவது?

12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில் கற்களை கொண்டு செல்கிறார்கள். நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா?

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார். அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.