வெடிகுண்டுகளுடன் ஈரான் தூதரகத்தினுள் நுழைந்த மர்ம நபர்: பிரான்சில் பரபரப்பு
பிரான்சிலுள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருப்பதாக எச்சரிக்கை விடுத்த நபர் ஒருவர் பாரிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையெறி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் ஜாக்கெட் அணிந்த ஒருவர் ஈரான் தூதரகத்திற்குள் நுழைந்து தன்னை தானே வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
தீவிரவாத தாக்குதல்
அதனை தொடர்ந்து, ஈரான் துணைதூதரகத்தை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டதுடன் குறித்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர் தீவிரவாத தாக்குதலுக்கு முயன்றாரா? அல்லது வேறு காரணத்திற்காக இப்படி நடந்து கொண்டாரா? என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரும் பரபரப்பு
அத்தோடு, தூதரகத்தின் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் உள்ள மெட்ரோ பாதைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.